திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியில் வாகன சோதனையின் போது உரிய அனுமதியின்றி கொண்டு வந்த 38 மூட்டை பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். மேலும் பட்டாசுகளை எடுத்து வந்த சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து, தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.