திருச்சி மண்டல டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்க கோரியும், இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட கோரியும், ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.