தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயுடன் கூட்டணி சேரும் கட்சிக்கு தனது வாழ்த்துகள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக கூறியுள்ளார். தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயின் அரசியல் வருகையால் தனது வாக்குகள் குறையாது என்றும், விஜய் ரசிகர்கள் தமக்கு தான் வாக்களிப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.