மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், முறையான வேலை மற்றும் முழுமையான சம்பளம் வழங்க வலியுறுத்தி பெரம்பலூர் அருகே நாரணமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தில் 50 நாட்களுக்கு மட்டும் வேலை வழங்குவதாகவும், முழுமையான சம்பளமான 360 ரூபாயை வழங்காமல் 250 ரூபாய் மட்டுமே வழங்குவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.இதையும் படியுங்கள் : பேரூராட்சி தலைவருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி... நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி மனு