காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லை மாவட்டம் களக்காடு தலையணையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ள தலையணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக காணும் பொங்கலன்று அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்வர். இந்தாண்டு காணும் பொங்கல் 16 ம் தேதி கொண்டாடப்படும் நிலையில்,தலையணையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்கள், கத்தி உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.