ஈரோடு மாவட்டம் பழையபாளையம் அருகே மறைந்த ஆடிட்டர் வீட்டில் இரண்டாவது முறையாக 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கணபதி நகரை சேர்ந்த ஆடிட்டர் துரைசாமி கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் அவரது மனைவி உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 40 சவரன் நகை மற்றும் 7 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றதாகக் கூறப்படுகிறது. இதேபோல், கடந்த 2023ஆம் ஆண்டு 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்ட நிலையில் மீண்டும் மீட்கப்பட்டது.