நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிப்பாளையத்தில் சாயக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் கால்வாய் வழியாக காவிரி ஆற்றில் கலப்பதாக புகாருக்குள்ளான மூன்று சாய ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அந்த ஆலைகளை பூட்டி சீல் வைத்தனர். குமாரபாளையத்தில் ஜெயா லுங்கி டையிங் ஆலை, மகேஷ்குமார் டெக்ஸ்டைல்ஸ் ஆலைகள் சட்டவிரோதமாக சாயநீரை வெளியேற்றுவதாகவும், பள்ளிப்பாளையத்தில் ஏற்கனவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட சாய்நாத் என்ற ஆலையில் ஜென்செட் அமைத்து இரவு நேரத்தில் இயக்குவதாகவும் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.