கிருஷ்ணகிரியில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள் வாடகைக்கு விடப்பட்ட 28 வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மொத்தமுள்ள 192 வீடுகளில் 150 வீடுகளில் குடித்தனம் உள்ள நிலையில், 28 வீடுகள் உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, உள்வாடகைக்கு விட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யாததால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.