திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கோப்பம்பட்டியில் செயல்பட்ட போலி மணல் தயாரிப்பு நிறுவனத்திற்கு, கனிமவளத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். வேடசந்தூர், குஜிலியம்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கிராவல் மண்ணை அரைத்து மணலாக தயாரித்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக, காவிரி பாதுகாப்பு குழு விவசாயிகள் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆட்சியர் உத்தரவின் பேரில் கோப்பம்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், போலி மணல் தயாரித்த நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி கொடைக்கானல் மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்து