வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதை அடுத்து புதுச்சேரியில் கடல் சீற்றம்.வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை.கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் கடற்கரையில் திரண்டுள்ள சுற்றுலா பயணிகள்.கடல் சீற்றமாக காணப்படுவதை அடுத்து படகுகளை பத்திரமாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் தீவிரம்.மீனவர்கள் கடலுக்கு செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதால் படகுகள் கரையிலேயே நிறுத்தம்.