ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை கடலோரக் பகுதியான திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் 100க்கும் மேற்பட்ட படகுகள் தரை தட்டி நின்றன. செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை கடல் உள்வாங்குவதும் பின்பு இயல்பு நிலைக்கு திரும்புவதும் அவ்வபோது நடக்கும் சாதாரண நிகழ்வு தான் என கூறப்படும் நிலையில் கடல் உள்வாங்கியதால் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் பாதிக்கப்பட்டனர்.