இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய திமுக பேச்சாளரை கண்டித்து, சென்னை வண்ணாரப்பேட்டை கல்லறைச்சாலை அருகே எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டத்துக்கு தலைமை வகித்த திமுக எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்திக்கு எதிராக முழக்கமிட்டனர்.