சென்னை மண்ணடியில் உள்ள SDPI கட்சி அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். SDPI கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைசி மீது பண மோசடி புகார் எழுந்ததை தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி கேரளாவில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, மண்ணடியிலுள்ள SDPI அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில், முக்கிய ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டன.