திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அம்பேத்கார் நகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் உள்ள கூரை வீட்டுக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டிற்குள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சென்னையை சேர்ந்த பரத், ஸ்ரீசிட்டி பகுதியில் இருந்து ஸ்கார்பியோ காரில் தொம்பரம்பேடு பகுதியிலுள்ள வழிபாட்டுத் தலத்துக்கு உறவினர்களுடன் சென்றார்.