வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கேடிஎம் பைக்கில் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். பிச்சனூர்பேட்டை பகுதியில் தனது நண்பர் பாலமுருகனுடன் பைக்கில் அதிவேகமாக சென்ற கல்லூரி மாணவர் புஷ்பராஜ், கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டி மற்றும் ஆட்டோவில் மோதினார். இதில் பெண் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.