திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் திட்டியதால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 5 மாதங்களாக கடனை திருப்பி செலுத்த முடியாத சூழலில், அருணா வீட்டிற்கு சென்ற நிதி நிறுவன ஊழியர், அவரை அவதூறாக பேசியுள்ளார்.