குமரி மாவட்டத்தில் இருந்து தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா வந்த பேருந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காலாண்டு விடுமுறையை முன்னிட்டு குமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுடன் 2 பேருந்துகளில் தேனிக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில், அதிகாலை 5 மணியளவில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் என 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.