காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஓங்கூர் கிராமத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 16 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உணவு அருந்திய மாணவர்களில் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட உடன் விரைந்து உத்திரமேரூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.