கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே தனியார் பேருந்தின் பின்புறம் மற்றும் படிக்கெட்டுகளில் ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்கராபுரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் ஸ்ரீராமகிருஷ்ணா டிரான்ஸ்போர்ட் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் படிக்கெட் மற்றும் பேருந்தின் பின் பக்கம் ஏணியில் ஏறி தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்தனர்.