விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த பள்ளி மாணவன் தவறி விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படியில் தொங்கிய படி பயணம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கிய படி சென்ற போது ஒரு மாணவன் தவறி விழுந்து காயமின்றி தப்பினார். பள்ளி மாணவர்கள் இது போன்ற ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.