பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பள்ளி வளாகத்திற்குள் புகுந்த நாய் கடித்து குதறியதில் எட்டாம் வகுப்பு மாணவி படுகாயமடைந்தார். பேரளி பகுதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிக்கு வெளியே சண்டையிட்டு குரைத்துக் கொண்டிருந்த இரண்டு வெறிநாய்கள் திடீரென பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை நோக்கி பாய்ந்தன. அப்போது, மாணவிகள் சுதாரித்துக் கொண்டு ஓட முயன்ற நிலையில், புவனேஸ்வரி என்ற மாணவியை முகத்தில் பாய்ந்து கடித்துக் குதறியது. படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெறிநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.