திருப்பத்தூர் மாவட்டம், தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதற்காக அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் ரகுபதியை நேரில் சந்திந்து கேட்ட போது, முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று பள்ளிக்கு விடுமுறை அளித்தேன் என தகவல் தெரிவித்தார்.