நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் பள்ளி மாணவியை ஐந்து தெருநாய்கள் சேர்ந்து துரத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நாய்கள் துரத்தியதில், மிரண்டு போன அந்த மாணவி, தனது பையைக் கொண்டு விரட்ட முயன்றபோது, பைக்கில் சென்ற நபர், நாய்களை விரட்டி மாணவியை மீட்டுள்ளார்.