ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பூக்காரத் தெருவில் சென்ற பள்ளிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி சிறிது தூரம் இழுத்து சென்றது. ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் மாணவர்கள் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.