திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் 6 வயது சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமாரெட்டிப்பாளையத்தை சேர்ந்த சிறுவன் கவுசிக், வீட்டில் இருந்து கடைக்கு சென்றபோது, பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் 2 நாய்கள் சுற்றி வளைத்து கடித்துள்ளன. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.