தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் நோயாளியை எட்டு மணி நேரம் காக்க வைத்ததாகவும், பிறகு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சைக்கு வந்த ரமேஷ் என்பவருக்கு ஆம்புலன்ஸ் கூட கொடுக்காமல் அலைக்கழித்ததாக சொல்லப்படுகிறது.