சம்பாதித்ததை காப்போம் சம்மந்தியை மீட்போம் என்பதையே கொள்கையாக வைத்துக்கொண்டு இபிஎஸ் செயல்படுவதாக அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தில் கட்டுப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடிப்பட்டவர்களை தான் ஆம்புலன்ஸில் ஏற்றி செல்வோம், தற்போது ஆம்புலன்ஸே அடிப்படும் சூழலை இபிஎஸ் உருவாக்கி விட்டதாக தெரிவித்தார்.