சாத்தனூர் அணையின் பிரதான 9 மதகுகள், மூவர்ணத்தில் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா, சாத்தனூர் பகுதியில் உள்ள சாத்தனூர் அணையில், இன்று மாலை நிலவரப்படி 3 ஆயிரம் கன அடி நீர் அணையின் பிரதான மதகுகளான ஒன்பது மதகுகள் வழியாக, தென்பண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூவர்ணத்தை பிரதிபலித்து ஜொலிக்கும் வகையில் மின் விளக்குகள் போடப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில், தற்போது 3000 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கவோ செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.