தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் கொலை வழக்கில், கூட்டுசதி என்ற பிரிவை சேர்த்து அனைத்து சாட்சிகளையும் மீண்டும் விசாரித்தால் ஏற்படும் விளைவுகளை அறிவீர்களா? என சிபிஐயிடம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியது. நேரம் கடந்தும் செல்போன் கடை திறந்து வைத்திருந்ததாக, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கை விரைந்து முடிக்க ஜெயராஜின் மனைவி ஜெயராணி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்த சிபிஐ, கூட்டு சதி பிரிவை தற்போது வரை சேர்க்கவில்லை என தெரிவித்தையடுத்து, நாளைக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.இதையும் பாருங்கள் - ஜெயராஜ், ஃபெனிக்ஸ் கொ*ல வழக்கு CBIக்கு ஐகோர்ட் கேள்வி | Sathankulam Case | High Court