தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் சித்திரை தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். உற்சவர் சாரங்கபாணி ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி தாயார்களுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தேரில் உலா வந்த சுவாமிகளை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.