கும்பகோணம் கோமளவல்லி தாயார் சமேத சாரங்கபாணி சுவாமி திருக்கோவில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று, தைப்பொங்கல் தேரோட்டத்திருவிழா (எ) ஸங்க்ரமண பிரமோற்சவம் பெருவிழா , இங்கு பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் இவ்விழா கடந்த ஏழாம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திரு வீதி உலா நடைபெற்றது விழாவின் ஒன்பதாம் நாளான தை முதல் நாளான இன்று உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் உடன் பட்டுடுத்தி சிறப்பு மலர் அலங்காரத்தில், நாதஸ்வர மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க திருத்தேருக்கு எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் சாரங்கா சாரங்கா என விண்ணதிர முழக்கங்கள் எழுப்பிய படி தேரினை வடம் பிடித்து இழுக்க தைப்பொங்கல் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதையும் படியுங்கள் : அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய கூட்டம்