தஞ்சை மாவட்டம் திருச்சேறையில் உள்ள சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் தைப்பூச பெருவிழாவின் நிறைவையொட்டி, புஷ்பபல்லக்கு வீதி உலா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்வேறு ஆபரணங்கள், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தாயார்களுடன் சாரநாத பெரும்மாள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.