ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது. தொண்டியில் உள்ள கடல் சூழ்ந்த மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா மற்றும் கங்காதேவி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பாய் மர படகு போட்டியில், 25 படகுகள் பங்கேற்றன. இதில் முதல் 4 இடத்தை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.