தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று திருத்தேரோட்டமும், விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு ஆகஸ்ட் 7ம் தேதி மாலையும் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், சங்கரன்கோவில் நகர் முழுவதும் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.