சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் நடந்த பிரதோஷத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷதை முன்னிட்டு பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு வீற்றிருக்கும் நந்தியம்பெருமானுக்கு அலங்காரமும் மகா தீபாரதணையும் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.