குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி ஆணையர் சுவீதாஸ்ரீ அதிக பணிச்சுமை கொடுத்ததால், மன உளைச்சலுக்கு ஆளாகி அலுவலக உதவியாளர் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறி தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக உதவியாளர் ஆனந்த் என்பவர் செவ்வாய்கிழமை அன்று விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நகராட்சி அலுவலகம் முன் குவிந்த ஆனந்தின் உறவினர்களுடன் தூய்மைப் பணியாளர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில், திமுக நகர்மன்ற செயலாளர் வினுகுமார் உள்ளிட்டோர், பணியாளர்களை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.