ஒரு மாத ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். கோரிக்கை தொடர்பாக பணியாற்றும் வேதா நிறுவனத்திடமும், மாநகராட்சியிடமும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.