வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு மரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து நீர் நிலைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில், வைகை அணை மற்றும் அணையின் பாசன கால்வாய் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.