தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கட்டட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சங்கரன்கோவிலை சேர்ந்த சந்தனராஜ் என்பவர் அதே பகுதியில் சேக்கிழார் தெருவில் புதிதாக கட்டி வரும் கட்டடத்தின் 3-வது மாடியில் பூச்சு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையும் படியுங்கள் : ”9 அமாவாசைக்குப் பின் தமிழகத்தில் நிலைமை மாறும்”... அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆரூடம்