கிருஷ்ணகிரியில் உரூஸ் திருவிழாவையொட்டி குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சந்தனக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. வான வேடிக்கைகளுடன், மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் இறுதியாக சங்கல் தோப்பு தர்காவை சென்றடைந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இறை வழிபாடு செய்தனர்.