காட்டுபாவா பள்ளிவாசலில், சந்தனக்கூடு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ளது காட்டுபாவா பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலில் உள்ள பக்ருதீன் பாவா வலியுல்லாஹ் தர்ஹாவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் சந்தனக்கூடு விழா இன்று அதிகாலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் முக்கிய திருவிழாவான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடைபெற்றது. அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பாவா பஹ்ருதீன் வலியுல்லாஹ் பாதுஷாவை வழிபட்டனர். அதிகாலை 3 மணி அளவில் புறப்பட்ட சந்தனக்கூடு, நான்கு வீதிகள் வழியாக தர்ஹாவை சுற்றி வந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதனையடுத்து ரவுலா ஷரீஃபில் இஸ்லாமியர்கள் சந்தனம் பூசி வழிபட்டனர்.