ராணிப்பேட்டையில் அமைந்துள்ள 'ஹஸ்ரத் சையத் குட்லஷா அவுலியா' தர்காவில் நாகூர் ஆண்டவர் பண்டிகையையொட்டி சந்தனக்கூடு விழா விமரிசையாக நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க சந்தனக்கூடு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட நிலையில், சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.