மதுரை சோழவந்தான் மேலக்கால் கணவாய் தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சோழவந்தான் மேலக்கால் கணவாய் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சந்தன கூடு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பின்னர்தர்ஹாவில் உள்ள அனைவருக்கும் சந்தனம் வழங்கப்பட்டது.இவ்விழாவில் இந்துக்களும் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.