உலக நன்மை வேண்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சமுத்திர ஆரத்தி நடைபெற்றது.நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். காணும் பொங்கலை முன்னிட்டு உலக நன்மை வேண்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் உள்ளூர் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி தீர்த்த கடலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து உலகத்தில் வாழும் அனைத்து மக்களும் நோய் நொடியின்றி நிம்மதியாக வாழ வேண்டும் என சமுத்திர ஆர்த்தி பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.இதையும் படியுங்கள் : இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான 5G பயனர்கள்