12 ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 12 ஆவது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் வரும் 23 ஆம் தேதி முதல் அவர்களின் அடையாள அட்டை முடக்கப்படும் என சாம்சங் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.