சாம்சங் நிறுவன தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் பணிக்கு திரும்ப உள்ளதாகவும், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டத்தை தொடர உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டிஆர்பி ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையிலும், தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையிலும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 14 கோரிக்கைகளை நிறைவேற்ற சாம்சங் நிர்வாகம் சம்மதம் தெரிவித்த நிலையில், ஒருதரப்பினர் பணிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள நிலையில், தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.