காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே, ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், 23 ஆம் நாளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் 5 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து, குடும்பத்துடன் திரண்டு போராட்டத்தில் ஈடுபடவும், அதற்கு அடுத்தபடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.