காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே, ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர்ந்து 25- வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்னைக்கு தீர்வு காண, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் 5 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி, தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு என அடுத்தடுத்த நெருக்கடிகள் கொடுத்தபோதும், சாம்சங் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.