ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 4-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்பதில் சாம்சங் தொழிற்சாலை பிடிவாத போக்கை கைபிடிப்பதாக கூறப்படும் நிலையில் தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி கணேசன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சாம்சங் நிறுவனம் சட்டவிரோதமாக உற்பத்தியில் ஈடுபட தொடங்கியிருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.