ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பைரவருக்கு, 22-ஆம் ஆண்டு சம்பக சஷ்டி நிறைவு நாள் நடைபெற்றது. இந்த விழாவில், அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரத்து ஒன்று திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு நடத்தினர்.